ஞாயிறு, மே 15, 2011

கனடாவில் இனிதே நிறைவேறிய எங்கவூரவை குடும்ப நிகழ்வு!

இனிதே நிறைவேறிய எங்கவூரவை குடும்ப நிகழ்வு!!!




எங்க ஆட்களின் நிகழ்வு தானே என்ற எண்ணத்துடன் நானும் எனது மனைவியும் வழமைக்கு மாறாக சற்று தாமதமாகவே நிகழ்விற்கு சென்றோம்.

நுழைவாயிலிலை விழாவிற்குரியவரின் தந்தை பாலனும், மனைவியும் அன்புடன் வரவேற்றனர்.

உள்ளே சென்றதும் தான் புரிந்துகொண்டேன் அதாவது நான் தாமதித்த விடயத்தை .

அதாவது நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் இப்படியான இட நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்களோ தெரியல்லை.

அழகான மண்டம், நேர்த்தியான ஒழுங்கமைப்பு, மனநிறைவான வரவேற்பு அதுமட்டுமன்றி அங்கே உபசரிப்பு கடமையில் ஈடுபட்டவர்கள் ஒரேமாதிரியான ஆடைகள் மட்டுமன்றி உபசரிப்பும் அதிகளவு கவனம் எடுத்து செய்திருந்தனர்.

படப்பிடிப்பும் அதற்குரிய ஒழுங்கமைப்பும் அதிக சிரத்தை எடுத்து செய்திருந்தனர், அதற்கமைவதுபோல் பாலனின் மகளும் இயற்கையான அழகின் ஒத்துழைப்புடன் அழகான ஆடையமைப்பு, பொறுமையான ஒத்துழைப்பு எல்லாமே இணைந்து ஒரு சிறந்த பூப்புனித நீராட்டுவிழாவாக அமைந்திருந்தது.

எமதூர் உறவுகளுடன் ஒரு இனிய மதியபோசன விருந்தில் இணைந்துகொண்ட மனத்திருப்தியோடு வீடு திரும்பினோம்.

இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஒத்துழைத்த அனைத்து உறவுகளிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.

நன்றி,

மு.லிங்கம்


5 comments:

அன்பு நண்பன் சொன்னது…

பகிர்விற்கு நன்றிகள்... "ஒற்றைமயே என்றும் பலம்"

அன்பு நண்பன் சொன்னது…

பகிர்விற்கு நன்றிகள்... "ஒற்றுமையே என்றும் பலம்"

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அண்ணா பகிர்வுக்கு மிக்க நன்றி... நாங்களும் பங்கு கொண்டது போல ஒரு உணர்வு எற்பட்டது... அதற்கு முக்கிய காரணம் தங்களது வசன நடை தான் என நினைக்கிறேன் மிக்க நன்றி ....

சித்தாரா மகேஷ். சொன்னது…

பகிர்வுக்கு மிகவும் நன்றி.

RUBAN சொன்னது…

பகிர்விற்கு நன்றிகள்...